பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவிலான நடிகராகவே மட்டுமின்றி, உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகராகவும் மாறிவிட்டார். அவர் பல ஆயிரம் கோடி வசூல் படங்களை கொடுத்து வருகிறார். அதேபோல் நடிகை சமந்தாவும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பிரபாஸ் இவ்வளவு வருடங்களில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கிரித்தி சனோன் போன்ற பல நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவரும் சமந்தாவும் இதுவரை ஒரே படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை. இந்த இருவரின் ரசிகர்கள் கூட அவர்கள் ஒரே படத்தில் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பிரபாஸ், சமந்தாவுடன் நடிக்காததற்குக் காரணம், இருவருக்கிடையிலான உயரப் பிரச்சனை என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. பிரபாஸ் 6.2 அடி உயரம், சமந்தா 5.2 அடி உயரம் மட்டுமே என்பதால் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தால் இந்த உயர வித்தியாசம் தெளிவாகத் தெரியும் என்பதால்தான் பிரபாஸ் அவருடன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே “சாஹோ” படத்தில் சமந்தா நடிக்கவிருந்தார், ஆனால் இந்த உயரப் பிரச்சனையின் காரணமாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அந்தப் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.