Touring Talkies
100% Cinema

Monday, July 28, 2025

Touring Talkies

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’படத்தின் கதைக்களம் இதுதானா? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கல்கி’ திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் ‘கிங்டம்’. இதில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். நெகடிவ் கதாப்பாத்திரத்தில் சத்யதேவ் நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் தின்னனூரி இயக்கியுள்ளார்.

இசை அமைப்பாளராக அனிருத் பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமன் டி.ஜான் மேற்கொண்டுள்ளனர். இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமாகும். தமிழ் மொழியில் இதே தலைப்புடன் வெளியாகவுள்ளது.

இப்படம் இலங்கையின் இயற்கை வளங்களை சூறையாட நினைக்கும் ஒரு சர்வதேச பயங்கரவாதக் குழு, அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு எதிராக நடத்தும் அத்துமீறல் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்திய அரசால் ஒரு ரகசிய ஏஜெண்ட் அனுப்பப்படுகிறார். அந்த ரகசிய அதிகாரியாக விஜய் தேவரகொண்டா பங்களிக்கிறார்.  இந்த படம் பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு இலங்கையில் நடந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தாண்டிக்குடி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, இப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News