ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பே இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு, ‘யு-ஏ 16+’ சான்றிதழுடன் வெளியிட அனுமதி கிடைத்துள்ளது.

இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்கள் இரண்டரை மணி நேரத்தை கடந்தே வெளியிடப்படுகின்றன. இதனால் ரசிகர்களின் பொறுமைக்கு சவால் ஏற்பட்டுள்ளது. ஆனால், இயக்குநர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு படம் சிறப்பாக அமைந்தால் அதன் நீளம் பிரச்னையல்ல, ஆனால் படம் சலிப்பை ஏற்படுத்தினால் அதே நீளம் எதிர்மறை அம்சமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.