Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அமரன் படத்தை தொடர்ந்து எஸ்.கே-ன் லைன் அப் இதுதானா? அடுத்த படம் எப்போது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து இதுவரை 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 23வது படத்தை தற்போது இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், அதை விரைவாக முடித்து, 2025 மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தை இயக்கி வரும் முருகதாஸுக்கு முன்னதாகவே, சிவகார்த்திகேயனின் 23வது படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த படத்துக்குப் பிறகு, சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகிய இயக்குனர்களின் படங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் நடித்து முடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News