Touring Talkies
100% Cinema

Saturday, May 31, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவா? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், சமீபத்தில் வெளியாகிய ‘அமரன்’ திரைப்படத்தின் நடித்து ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தற்போது, பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் 23-வது திரைப்படம் ‘மதராஸி’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி ‘எஸ்கே 23’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும், இந்தியில் ‘தில் மதராஸி’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில்தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த ‘தி கோட்’ படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் நடைபெற்றுவந்தது. தற்போது அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, சிவகார்த்திகேயன் மற்றும் வித்யூத் ஜம்வால் இடையே நடைபெறும் சண்டைக் காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டன எனத் தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News