தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது, போட்டோஷூட் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின.

ஆனால், “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை ஏற்படுத்தாததால், தற்போது ஷங்கரின் படத்தில் நடிப்பதில் ரன்வீர் சிங் சற்றே தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, “அந்நியன்” ரீமேக்கிற்கு இதற்கு முன் ஒதுக்கப்பட்ட அவரது கால்ஷீட்டை “டான் 3” என்ற ஹிந்தி படத்திற்கு மாற்றி, அதற்கான வேலைகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்வீர் சிங்கின் இந்த முடிவினால், “அந்நியன்” ஹிந்தி ரீமேக் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இப்படம் முற்றிலுமாக கைவிடப்படலாம் என்றும் பாலிவுட்டில் தகவல் பரவுகிறது.