சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘பராசக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சுதா கெங்கரா. இதில் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘பராசக்தி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘வேட்டை நாய்’ என்ற நாவலை திரைப்படமாக எடுக்க சுதா கெங்கரா திட்டமிட்டு உள்ளார். மேலும் அந்த புதிய படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சிம்பு, அந்த படங்களை முடித்த பிறகு சுதா கெங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.