இயக்குனர் வெங்கட் பிரபு ‘தி கோட்’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் அடுத்து எந்தப் படத்தை இயக்கவுள்ளார் என்பதைப் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சிவகார்த்திகேயன் மற்றும் அக்ஷய் குமார் ஆகிய நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேசிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு, நடிகர் சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது என்றும் கூறப்படுகிறது.