‘அமரன்’ திரைப்படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ எனும் படத்தை தனது நிறுவனத்தின் மூலம் வெளியிட இருக்கிறார்.
ராஜவேலு இயக்கிய இந்த திரைப்படத்தில் ‘கனா’ படத்தில் நடித்த தர்ஷன், காளி வெங்கட் மற்றும் வினோதினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது.