நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, இப்போது 18வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் நடிகை ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார்.
ஹவுஸ்மேட்களுக்கு, காதராஜ் எனும் புனைபெயருடைய ஒரு கழுதையை பராமரிக்க வேண்டும் என்ற ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரோமோ வெளியான பிறகு, பீட்டா இந்தியா, சல்மான் கான் மற்றும் பிக் பாஸ் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதி, விலங்குகளை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், மன உளைச்சலை உருவாக்கும் முன்மாதிரியாக இருக்கலாம் என்று கூறி, கழுதையை ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.