நடிகர் ஜெயம் ரவி தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை “ரவி மோகன் ஸ்டுடியோ” என்ற பெயரில் தொடங்கி இருக்கிறார்.மேலும், அவர் தனது பெயரையும் “ரவி மோகன்” என மாற்றியுள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் தானே ஒரு புதிய படத்தை தயாரித்து, அதில் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் பணியாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் அவரது மகன் ஆரவ் ரவியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். 2018ஆம் ஆண்டில், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கிய “டிக் டிக் டிக்” படத்தில் ஆரவ் ரவி, ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் தனது மகனை முக்கிய வேடத்தில் நடிக்கவைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை அவரது தந்தையான எடிட்டர் மோகன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.