இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் 2023ல் வெளியானது. இதில் அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், மிகுந்த வசூலைப் பெற்றது. இதன் வெற்றியின் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் சலார் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், தி ராஜா சாப் படத்திற்குப் பிறகு சலார் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது, சலார் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் முன்னதாக, ஹனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அவர் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகே சலார் 2 படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் காரணமாகவும் சலார் 2 படத்தின் வேலைகள் தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.