‘டேக் ஆப்’, ‘மாலிக்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன், தற்போது மம்முட்டி முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156664-683x1024.jpg)
அத்துடன், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் தற்போது நயன்தாராவும் சேர்ந்திருக்கிறார், இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156652-819x1024.jpg)
மம்முட்டியுடன் நயன்தாரா ஏற்கனவே ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புதிய நியமம்’ போன்ற சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்போது மீண்டும் அவர்களது கூட்டணியால் ரசிகர்கள் பெரிதும் உற்சாகமாகியுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு தற்காலிகமாக ‘எம்எம்எம்என் (MMMN)’ என பெயரிடப்பட்டுள்ளது.