அல்லு அர்ஜுனும் அட்லியும் இணையவுள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர் எனும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த படத்திற்காக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. ஆனால், சில நடிகைகள் தங்களிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, மிருணாள் தாகூர் இந்தப் படத்தில் முதன்மை கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஜான்வி கபூரும் விரைவில் ஒப்பந்தமாகலாம் என தெரிகிறது. மூன்றாவது கதாநாயகியாக யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவடையவில்லை என்றும் அந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சீதா ராமம்’ மற்றும் ‘ஹாய் நானா’ போன்ற திரைப்படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமானவர் மிருணாள். மேலும் ஹிந்தியில் அவர் நடித்து வந்திருப்பதால், இந்த பான் இந்தியா படத்துக்குப் பொருத்தமான தேர்வாக இருப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகிகள் குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.