இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான கன்னட திரைப்படமான காந்தாரா மிகப்பெரிய வெற்றியை கண்டது. கன்னடத்தில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, பாலிவுட் பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.
தற்போது, இந்த படத்தின் ப்ரீக்வலாக, ‘காந்தாரா சாப்ட்டர் 1’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ரிஷப் ஷெட்டி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி கன்னட திரைப்பட உலகில் பரவியுள்ளது. குறிப்பாக, ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார் என்பதும் பேசப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், ரிஷப் ஷெட்டி தனது மனைவியுடன் மோகன்லாலைக் சந்தித்ததன் நோக்கம், அவரை இந்த படத்தில் நடிக்க அழைப்பதற்காகவே என்பது கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.