தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், தற்போது கமல்ஹாசனை முன்னணி கதாபாத்திரத்தில் கொண்டு தக் லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரவிருக்கும் ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்குப் பின், மணிரத்னம் ஒரு காதல் கதையை இயக்க உள்ளதாகவும், அதில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவீன் பொலிஷெட்டி, தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர். இவர் ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா, ஜாதி ரத்னாலு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.