மலையாள திரையுலகில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான “பிரேமலு” திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், பெரிய நடிகர்களின்றி நஸ்லின், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் சுமார் ₹130 கோடி ரூபாய் வசூல் செய்தது.

நஸ்லின் மற்றும் மமிதா பைஜு, இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சென்சேஷனல் நடிகர்களாக மாறிவிட்டனர். மலையாள திரையுலகை தாண்டி, மற்ற மாநிலங்களில் உள்ள ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளனர். தமிழகத்திலும் “பிரேமலு” படத்தின் மலையாள வெர்ஷன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனால், படக்குழு இதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டது, அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால், “பிரேமலு 2” குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், படக்குழு இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்தது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதற்குக் காரணம், மமிதா பைஜு தான் என கூறப்படுகிறது. விஜய்யின் “ஜனநாயகன்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், “பிரேமலு 2″ படப்பிடிப்பில் அவர் தற்போது பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.”ஜனநாயகன்” படப்பிடிப்பு முடிந்த பிறகு, மமிதா பைஜு, “பிரேமலு 2” படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.