Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

கல்கி 2 படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறாரா? கதாபாத்திரம் இதுதானா? இயக்குனர் நாக் அஸ்வின் சொன்ன அப்டேட்! #Kalki2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் கர்ணனாக நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் பிரமாண்டமான 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமாவாக, கமல்ஹாசன் யாஸ்கினாக, கிருஷ்ணராக கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியனாக, தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. உலக அளவில் படம் ரூ.1,100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.

முதல் பாகத்தில் கிருஷ்ணராக பாலசுப்பிரமணியன் நடித்திருந்தாலும், அவரது முகம் திரையில் காண்பிக்கப்படவில்லை. இதனால், இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணராக மகேஷ் பாபு நடிக்க வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது.இந்த தகவலுக்கு இயக்குனர் நாக் அஸ்வின் பதிலளித்தார். அவர் கூறியதாவது: கிருஷ்ணர் கதாபாத்திரம் திரையில் அதிக நேரம் தோன்றும் என்றால் மகேஷ் பாபு மிகவும் பொருத்தமாக இருப்பார். அதனால் படம் பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெறும். ஆனால் கல்கி பிரபஞ்சத்தில் கிருஷ்ணரின் முகத்தை காட்ட நான் விரும்பவில்லை என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News