தமிழில் கடைசியாக ‘ரகு தாத்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர், அவர் ஹிந்தியில் நடித்த ‘தெறி’ படத்தின் ரீமேக் பதிப்பான ‘பேபி ஜான்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார், மேலும் அதன் பிறகு அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு ‘அக்கா’ என்ற ஒரு வெப்சீரியலில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மீண்டும் ஹிந்தியில் காமெடியுடன் கூடிய ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது, அவர் அந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.