தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி இயக்குநராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது நடிகர் சூர்யாவை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ‘ரெட்ரோ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படத்திற்கான பணிகளை கார்த்திக் சுப்பராஜ் தற்போது முதல் கட்டமாக ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து, அவருக்கு தனது புதிய கதையை கூறியுள்ளார். அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்ததால், அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் கைவசம் சில படங்கள் இருப்பதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.