நடிகர் தனுஷ், தற்போது ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘இட்லி கடை’ என்ற படத்தை அவர் இயக்கியும் நடித்தும் வந்தார். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவற்றில், ‘இட்லி கடை’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், படம் தள்ளிப் போகலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது.

இந்நிலையில், ‘இட்லி கடை’ படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளது. இதை பாங்காக்கில் படமாக்கவுள்ளனர். அது முடிந்த பிறகு தான் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும், ‘குபேரா’ படத்தில் இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அனைத்து வேலைகளும், ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.