தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், “பார்க்கிங்,” “லப்பர் பந்து” போன்ற வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கவினுடன் உங்களுக்கு போட்டியா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது காலங்காலமாக இருந்து வருகிறது. ரஜினி, கமல் தொடங்கி இன்றும் அந்த போட்டி தொடர்கிறது. ஆனால், எனது கருத்தில், போட்டி என்பது இரண்டு பேருக்குள் மட்டுமே இருக்க வேண்டியதில்லை. தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள்.
நாம் வளர்ந்த பிறகு, நம் பார்வை மாறலாம். நம்முடைய கடைசி படத்தின் சாதனையை முறியடிப்பதே உண்மையான சவால். நான் கடந்த படத்திலிருந்து சில பயனுள்ள விஷயங்களை கற்றுக்கொண்டேன். இனி நான் நடிக்கும் படங்களில் அதைவிட சிறப்பாக என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். அதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த வகையில், பல நடிகர்கள் இருப்பதை நான் சந்தோஷமாக பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் என்றார் ஹரிஷ் கல்யாண்.