Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா இந்தியன் 3 திரைப்படம்? #INDIAN 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம், எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட குறைவான வரவேற்பைப் பெற்றது.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது ‘இந்தியன் 3’ படத்திற்கான படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக ஒரு செய்தி வெளியானது. இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகம் சிறப்பாக இருக்கும் என ‘படக்குழு தரப்பில் கூறியிருந்தனர்.

‘இந்தியன் 3’ படத்தை கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படத்தின் வெளியிட்ட பிறகே வெளியிடுவார்கள் என முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘இந்தியன் 3’ படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News