இயக்குனர் எச். வினோத், ‘துணிவு’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷ் நடித்த புதிய திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குவதற்கான பணிகளை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு எச். வினோதிற்கு கிடைத்தது.

இந்த காரணத்தால், தனுஷின் படத்திற்கு முன்பாக, தற்போது விஜயின் படத்தை இயக்கி வருகிறார். இதன் பின்னர், எச். வினோத் இயக்கும் தனுஷின் படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூலை 28ம் தேதி, தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.