Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘கஜினி 2’ விரைவில் உருவாகிறதா? அப்டேட் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தியில் சல்மான் கான் நடித்துள்ள “சிக்கந்தர்” என்ற திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இந்த படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் “மதராஸி” என்ற புதிய படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த “கஜினி” என்ற படத்தை இயக்கியிருந்த ஏ.ஆர். முருகதாஸ், தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறும்போது, “கஜினி 2 படத்தை இயக்குவது குறித்து நான் ஆலோசித்து வருகிறேன். தெலுங்கு படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்.

அந்த படத்துக்கேற்ற சரியான நேரம் வந்தவுடன் அதை இயக்கத் தொடங்குவேன் என தெரிவித்துள்ளார்.மேலும், “கஜினி 2” படத்தை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்க இருப்பதாக முருகதாஸ் கூறியுள்ளார்.கஜினி படத்தில் தமிழில் சூர்யாவும் தெலுங்கில் அமீர்கானும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News