Saturday, January 18, 2025

உறுதியானதா தனுஷ் வெங்கி அட்லூரி கூட்டணி? படத்தின் தலைப்பு இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, சில படங்களை இயக்கி இருந்தாலும், அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. அதன் பிறகு, வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகிய கடைசி படம் ‘லக்கி பாஸ்கர்’ சூப்பர் ஹிட்டாக மாறியது. அதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி தனது அடுத்த படத்தை யாருடன் இயக்குவார் என்பதே ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

சமீபத்தில், வெங்கி அட்லூரி மீண்டும் நடிகர் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ‘ஹானஸ்ட்ராஜ்’ என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், ‘ஹானஸ்ட்ராஜ்’ என்ற தலைப்பில் 1994ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News