இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதராஸி’. இதில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் அனிருத் ஆகிறார். திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படம், ஏற்கனவே வெளியாகிய கஜினி திரைப்படத்தின் திரைக்கதையும், துப்பாக்கி திரைப்படத்தின் ஆக்சனையும் கலந்த பாணியில் உருவாகியுள்ளது என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதனால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘குட் நைட்’ திரைப்படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரனுடன், சிவகார்த்திகேயன் அடுத்ததாக இணைந்து நடிக்க உள்ளார் என்று கூறப்படும் நிலையில் இந்த புதிய படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.