‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பிறகு தனுஷ் ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பில் ஜி.வி.பிரகாஷ் பணியாற்ற, ஒளிப்பதிவில் கிரண் கெளசிக் செயல்படுகின்றார்.

தனுஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் நாயகன் யார் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை, தற்போது அருண் விஜய் நடிக்க இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனுஷ் இதில் சிறப்பு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழு தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படத்தின் முக்கியக் காட்சிகளை படமாக்கிவிட்டது. விரைவில் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 75% காட்சிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.