இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதிலே கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, எஸ்.ஜே. சூர்யா மலையாள மொழிப் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முன்னதாக பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அவர் சில நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவிற்குத் தனது முதல் கால் பதிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்குப் பிறகு, மற்றொரு படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.