நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு ரசிகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது

இச்சந்திப்பு, இருவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்களா என்ற கேள்வியையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் எழச் செய்துள்ளது.இருவரும் இந்தச் சந்திப்பு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காதபோதிலும், இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

