மலையாளத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவான ‘துடரும்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்று விறுவிறுப்பாக ஓடியது. இப்படத்தை இயக்கியவர் தருண் மூர்த்தி.

இந்நிலையில், இயக்குநர் தருண் மூர்த்தியுடன் நடிகர் கார்த்தி அடுத்த படத்திற்காக இணையும் நோக்கில் பேசிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இருவரும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், ‘மாமன்’, ‘கருடன்’ படங்களை தயாரித்த ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் இந்த புதிய திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘துடரும்’ படம் வெளியானபோது அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், நடிகர் கார்த்தி, இயக்குநர் தருண் மூர்த்தியை நேரில் சந்தித்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.