தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

இந்நிலையில், இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைக்காதது குறித்து தீபிகா படுகோனே வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியாவில் ஆஸ்கார் விருதுக்கு தகுதியான பல படங்கள் தயாராகியுள்ளன. ஆனால், அவை எல்லாவற்றையும் புறக்கணித்து ஆஸ்கார் விருது வழங்கப்படவில்லை.
நமக்கு கிடைக்க வேண்டிய ஆஸ்கார் விருதுகள் பறிக்கப்படுகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் பல சிறந்த படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்களுக்கும், அதில் நடித்த நடிகர்-நடிகைகளின் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்த தருணங்கள் எனக்கு முக்கியமானவை. நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், ஒரு இந்தியராக அந்த வெற்றி மிகச் சிறப்பாக உணர்ந்தது” என்று கூறினார்.