ஆஸ்கர் விருதுக்கு இணையான விருது வழங்கும் விழா பாப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்). ஆண்டுதோறும் இந்த விருது விழா லண்டனில் நடக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான 78வது விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது.இந்த விருது விழாவில் வாடிகன் நாடகத் திரைப்படம் ‘கான்கலேவ்’ நான்கு விருதுகளை வென்றது, சிறந்த படம் மற்றும் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த எடிட்டிங், ஆகிய விருதுகள் இதில் அடங்கும். பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ இந்திய திரைப்படம் விருது எதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
