Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்தியன் 3 திரைப்படம் ஓடிடி-ல் அல்ல, திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்… இயக்குனர் ஷங்கர் உறுதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. ‘இந்தியன் 2’ படத்திற்கு நெகடிவ் கருத்துகள் அதிகம் வெளிப்பட்டாலும், ‘இந்தியன் 3’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ‘இந்தியன் 3’ படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்ற தகவல்கள் பரவின.

மேலும், இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 3’ படத்தில் ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகளில் சில மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த மாற்றங்களை செயல்படுத்த நடிகர் கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தகவல்கள் உலாவின.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் பேசும்போது, “இந்தியன் 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தன இந்தளவு நெகடிவ் விமர்சனங்கள் நான் எதிர்பார்க்கவில்லை. இந்த கருத்துக்களை மனதில் வைத்து, ‘இந்தியன் 3’ படத்தை சிறப்பாக அமைத்துள்ளேன் இப்படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். மேலும், இந்த படம் ஓ.டி.டி தளத்தில் அல்ல, திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News