‘ஈஸ்வரன்,’ ‘கலக தலைவன்,’ ‘பூமி’ போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நிதி அகர்வால். இவரது நடிப்பு தெலுங்கு திரைப்படங்களிலும் வியாபித்துள்ளது. தற்போது, பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா இணைந்து தயாரிக்கின்றன.
தமன் இசையமைக்கின்ற இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் ஏப்ரல் 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து நிதி அகர்வால் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் பொதுவாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், ‘தி ராஜா சாப்’ படம் மக்களிடம் உள்ள எனது கண்ணோட்டத்தை மாற்றும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் வழக்கமாக நான் செய்யும் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்,” என்றார்