இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், 2 ஆஸ்கார் விருதுகளை தன்னதாக்கிய உலக புகழ்பெற்ற கலைஞர். 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படமே அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. அதன்பின் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிப் படங்கள் மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் ஈரானிய மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி, உலக அளவில் ஏராளமான விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். ஏறக்குறைய 32 ஆண்டுகளை கடந்த அவர், இன்று வரை இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர், ஏ.ஆர். ரகுமான் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார். மேலும் பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுக்கு கீபோர்டு கலைஞராக பணியாற்றியுள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில், அவர் அவ்வாறு பணியாற்றிய காலத்திலிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், “எம்.எஸ். விஸ்வநாதன் தமிழ் மொழியில் தேன், வெண்ணெய், தங்கம் ஆகியவற்றை புனைந்தது போல இசையமைக்க வல்லவர். அவரது வேலை என் மனதில் மிகுந்த இடம் பெற்றது, அவர் எனது மிகவும் விருப்பமானவர். டி. ராஜேந்தரின் இசை, அவருடைய இதயத்திலிருந்து நேரடியாக வருகிறது. அவர் இசையை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அது தனித்தன்மையுடன் பொருந்தும்.
அதுவே, என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள் பலர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த சமயத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கலையிற்கே மரியாதையை உருவாக்கி தந்தார். அவரின் இசை பற்றிய சிறப்பை சொல்ல நான் தேவையில்லை, அதற்கான நிலைமை அனைவருக்கும் தெரியும். அவர் எனக்கு ஒரு மரியாதைக்குரிய கலைஞராக இருந்தார். அவரிடமிருந்து, இசையை தாண்டி மரியாதை என்ற உண்மையை கற்றுக்கொண்டேன்” என்று ரகுமான் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.