‘கா’ படத்தை சுதீப் மற்றும் சுஜித் இணைந்து இயக்கியுள்ளனர். இது இவர்களின் முதல் படமாகும். தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியிடப்படுகிறது. இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
அந்நிலையில், ஐதராபாத்தில் இந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நாக சைதன்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது நடிகர் கிரண் அப்பாவரம் பேசினார். இந்த படம் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார். இதுகுறித்து அவர், “எனக்கு வெற்றியும் தோல்வியும் உள்ளன. நான் 4 வருடங்களில் 8 படங்களில் நடித்துள்ளேன். அதில் 4 நல்ல படங்களை கொடுத்துள்ளேன். எனக்கு தோல்வி நடிகன் என்ற சின்னம் கிடையாது.
எல்லா படமும் வெற்றியடையுமென உறுதி அளிக்க முடியாது. ஆனால் அந்த படத்திற்கு முழு உழைப்பை தருவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘கா’ படத்தை யாராவது மோசமானதாக எண்ணினால், நான் சினிமாவை விட்டு விலகுவேன், இது எனது வாக்குறுதி” என்றார்.