Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நீங்கள் இல்லையென்றால் அது சுதாவின் இறுதிச்சுற்று’யாகவே இருந்து இருக்கும்… இயக்குனர் சுதா கொங்கரா உருக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு நிலையை ஏற்படுத்திய இயக்குனர் சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம், 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடிக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘இறுதிச்சுற்று’ வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா ஒரு உணர்வுபூர்வமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”ஜனவரி 29, 2016 அன்று வெளியான எனது சிறந்த படமான ‘இறுதிச்சுற்று’-க்கு நீங்கள் அளித்த ஆதரவால், அது என் வாழ்க்கையை மாற்றியது. நீங்கள் இல்லையெனில், அது ‘சுதாவின் இறுதிச்சுற்று’யாகவே இருந்து இருக்கும். ‘பராசக்தி’ படத்திற்கும் நீங்கள் அளித்த அன்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே, இந்த படத்திற்கும் எனது முழுத்திறனை வழங்க உறுதி செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News