ஒருகாலத்தில் திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர் நடிகை ஜோதி, நீண்ட இடைவேளைக்கு பிறகு தெலுங்கு பிக் பாஸ் முதல் சீசனிலும் பங்கேற்றார், ஆனால் சில வாரங்களே பங்கேற்றார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

அதில், நான் ஒரிசாவில் பிறந்தேன். விசாகப்பட்டினத்தில் வளர்ந்தேன். கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையால் ஐதராபாத் வந்தேன். முதல் முறையாக ஆடிஷனுக்கு சென்றவுடன் தேர்வு செய்யப்பட்டேன். அதிலிருந்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தேன்.
ஒருவரை காதலித்தேன், ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அந்த வேதனையில் உடனடியாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அது என் வாழ்க்கையின் மிக மோசமான முடிவு. இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றோம். அதன் பிறகு நான் தனியாகவே இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்ய விரும்புகிறேன். ஒரு நல்ல மனிதரைச் சந்தித்தால் தயங்காமல் திருமணம் செய்வேன்” எனக் கூறினார்.

