Saturday, January 4, 2025

கன்னட சினிமாவை பிரபலப்படுத்துவேன்… யூஐ பட நடிகை ரீஷ்மா நானையா உறுதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல கன்னட நடிகை ரீஷ்மா நானையா, 2022-ம் ஆண்டு வெளியான ஏக் லவ் யா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், ரீஷ்மா தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, உபேந்திரா இயக்கி நடித்த யுஐ திரைப்படத்தில் ரீஷ்மா முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இந்த பான் இந்திய திரைப்படம் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதுகுறித்து ரீஷ்மா கூறுகையில், “கன்னட சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பான் இந்திய படங்களில் நடிப்பது எனக்கு பெரிய பொறுப்பை அளிக்கிறது. இது கன்னட சினிமாவை பலர் மத்தியில் பிரபலமாக்க உதவுகிறது. கன்னடத்தில் சில அற்புதமான படங்கள் தயாரிக்கபட்டுள்ளன, அந்த வகையில் நான் அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

ரீஷ்மா அடுத்ததாக கேடி – தி டெவில் படத்தில் நடித்து வருகிறார். இது பான் இந்திய படம் ஆகும், இதில் துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News