Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இனிமே சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடிப்பேன் – நடிகை சமந்தா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நீண்ட காலமாக திகழ்ந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்குப் பிறகு, படங்களில் நடிப்பதை குறைத்திருந்தார். இதற்கு அவரின் உடல்நிலை முக்கிய காரணமாக இருந்தது. தசை அழற்சி பிரச்னையால், சமந்தா சில காலம் சிகிச்சையில் இருந்தார். இருந்தாலும், யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களிலும், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸிலும் கதையின் நாயகியாக நடித்தார். தற்போது, மீண்டும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா, தொடர்ந்து நடிப்பது சுலபம் தான். ஆனால், நான் எனது ஒவ்வொரு படத்தையும் கடைசி படம் போல் நடிக்க விரும்புகிறேன் என கூறினார்.

மேலும், இனி சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஒரு திரைப்படத்தை தேர்ந்தெடுக்கும்போது பலதரப்பட்ட யோசனைகள் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News