Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

விரைவில் மீண்டும் சினிமாவில் நடித்து, என் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்வேன் – நடிகர் சிவராஜ் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘ஜெயிலர்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மாதம் காலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜ்குமார், நேற்று முன்தினம் கர்நாடகாவுக்கு திரும்பினார்.

அதன்பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, சிவராஜ்குமாரை சந்தித்து அவரின் நலனை விசாரித்தார். அப்போது, மீடியாக்களுக்கு சிவராஜ்குமார், ”புற்றுநோய் என மருத்துவர்கள் கூறியபோது நான் பயந்துவிட்டேன்.

ஆனால் என் ரசிகர்களும், நண்பர்களும் எனக்கு முழு ஆதரவையும் வழங்கி எனது பக்கபலமாக இருந்தனர். இப்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் குணமாகி வருகிறேன். எனவே, விரைவில் மீண்டும் சினிமாவில் நடித்து, என் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News