லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் பல ஊடகங்களுக்கு இப்படம் குறித்து பேட்டி அளித்து வருகிறார்.
அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், பராசக்தி படத்தில் நெகடிவ் கேரக்டரில் நான் நடிப்பதாக இருந்தது. சுதா கொங்கரா மேடம் சொன்ன இந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயனிடமும் பேசினேன் அவரும் நிச்சயம் இது சிறப்பான ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார். ஆனால் என்னுடைய கூலி படத்தின் டைம் லைன் கமிட்மெண்ட்டால் இது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.