நடிகை ஸ்வாதி கொண்டே, விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஈரமான ரோஜாவே” சீசன் 2ல் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வெப் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அண்மையில் வெளியான “மெய்யழகன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமியுடன் நடித்த அனுபவத்தை பற்றி பேசிய ஸ்வாதி, “அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய கலரினைப் பார்த்து பிரமித்து விட்டேன். அவரை கட்டிப்பிடிக்கும் காட்சியில் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். என் பதட்டத்தை கவனித்த அரவிந்த்சாமி, இயல்பாக இருக்கச் சொல்லி, காட்சியை எப்படி செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார்.

அவரை இதற்கு முன்பு சந்திக்கவில்லை, ஆனால் அவர் எனக்கு பல வருடங்களாக அறிமுகமானவரைப் போல நடந்து கொண்டார்” என கூறியுள்ளார். தற்போது, ஸ்வாதி கொண்டே சன் டிவியில் ஒளிபரப்பாகும் “மூன்று முடிச்சு” தொடரிலும் நடித்து வருகிறார்.