டொமினிக் அருண் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘லோகா சாப்டர்-1: சந்திரா’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் பாராட்டுகள், அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறியதாவது: “இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கு பெரும் பதட்டம் இருந்தது. ரசிகர்கள் என்னை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பயமும் இருந்தது. ஆனால் ரசிகர்களின் வரவேற்பு எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. இதுபோன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற உற்சாகமும் உருவாகியுள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.