Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

100 கோடி வசூலை குவித்து அசத்திய ‘லோகா’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இரு மொழிப் பிரதேசங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆன நிலையில், உலகளவில் ரூ.100 கோடி வசூலித்ததாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News