தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடக்கத்திலிருந்தே தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் ‘கராத்தே பாபு’ என்ற புதிய திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கு அடுத்ததாக, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் ரவி மோகன் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், ரவி மோகன் சென்னை எழும்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இங்கு நிறைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறியிருக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் போல நடிகனாகவே இருந்து செல்வதையே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் கராத்தே பாபு படத்தின் டீஸர் பார்த்துவிட்டு அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கால் செய்து என் கேரக்டர் போலவே உள்ளதே என கூறினார் ஆனால் இயக்குனர் மழுப்ப அமைச்சர் அவர்கள் நான் தான்பா கராத்தே பாபு என கூறி சிரித்தார் பின்னர் எங்கள் படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என கூறியுள்ளார்.