நடிகை மிருணாள் தாகூர், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “சீதா ராமம், ஹாய் நானா, லஸ்ட் ஸ்டோரீஸ்” ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமாகியுள்ளார்.
அவரது நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் “பேமிலி ஸ்டார்” ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் திரையில் காணப்படவில்லை. இதுகுறித்து மிருணாள் தாகூர், சமீபத்தில் தனது மனநிலையை பகிர்ந்துகொண்டார்.ரசிகர்கள் எனது கதாபாத்திரங்களை விரும்புகிறார்கள். அதனால், நான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கவனமாக தேர்வு செய்கிறேன். பல படங்களில் கை பதியாமல், முழுவதுமாக ஒரே ஒரு படத்திற்குக் கவனம் செலுத்துவதே எனது வழக்கம். நீண்ட நாட்கள் மக்கள் மனதில் நிற்கும் ஐகானிக் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்,” என்றார்.