பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகளாகும் ஜான்வி கபூர், இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியுள்ள “தேவரா” திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, ஜான்வி கபூர் தமிழ் படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறாராம்.இந்த நிலையில், ஜான்வி கபூர் திருமணம் குறித்த தனது எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, “திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். மேலும், திருமணத்திற்குப் பிறகு கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருமலையில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்று கூறினார்.