100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகர் பிரித்விராஜ், 2019ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்குநராக உருவெடுத்து, மோகன்லாலை முன்னணி கதாபாத்திரமாக வைத்து “லூசிபர்” திரைப்படத்தை இயக்கினார். அரசியல் பின்னணியுடன் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, மலையாள திரைப்படத் துறையில் முதல் முறையாக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த திரைப்படமாகும். அதன் பின்னர், பிரித்விராஜ் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடிப்பதை தொடர்ந்தபோது, இயக்கத்திலும் கவனம் செலுத்தினார்.
அந்த வகையில், “லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகமாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்த “எம்புரான்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இந்த படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில், “எம்புரான்” திரைப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கிடையில், “சலார்” படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து நடித்த நடிகர் பிரபாஸ், “எம்புரான்” டீசரை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்புரான்” டீசரை பார்த்தேன். உண்மையாகவே இது உலகத் தரத்தில் உருவாகியுள்ளது. சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒருவராக இருக்கும் மோகன்லால் சாரின் நடிப்பில், எனது சொந்தவரதாவின் இயக்கத்தில் (பிரித்விராஜ் “சலார்” படத்தில் வரதராஜ மன்னராக நடித்திருந்தார்), முழு படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.